/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்குகான்கிரீட் வீடு கட்ட உத்தரவு வழங்கல்

ADDED : ஏப் 22, 2025 01:11 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. அங்கு, குடிசை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் குறித்து, கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரித்து, அரசுக்கு
அனுப்பி வைக்கப்படுகிறது.
இறுதி பட்டியலில் இடம் பெறும் பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 360 சதுர அடியில் கான்கிரீட் வீடுகள் கட்ட, ரூ.3.40 லட்சம் வழங்கப்படுகிறது. குடிசை வீட்டில்
வசித்து, அரசின் கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட நிதி வழங்குகிறது. நேற்று, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், கணக்கெடுப்பில் விடுபட்ட ஐந்து
பயனாளிகளுக்கு, கான்கிரீட் வீடு கட்டுவதற்கான உத்தரவை ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார். பி.டி.ஓ.,கார்த்தி, தி.மு.க., கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார்
உடனிருந்தனர்.
இது குறித்து,ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்,' குடிசை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் பெயர்கள், கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், ஒன்றிய அலுவலகத்தை அணுகலாம். அவர்களும்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.