/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை
/
பனமரத்துப்பட்டியில் இரு நாட்களாக கொட்டிய மழை
ADDED : அக் 12, 2024 01:18 AM
பனமரத்துப்பட்டியில்
இரு நாட்களாக
கொட்டிய மழை
பனமரத்துப்பட்டி, அக். 12-
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், இரண்டு நாட்களாக மழை கன மழை கொட்டியது.
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம், தினசரி மழை பொழிந்து வருவதால், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.
நேற்று முன்தினம் மதியம், 2:30 மணி முதல் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. வயல், வரப்பு நிரம்பி மழை நீர் ஓடியது. மாலை, 4:30 மணிக்கு மழை ஓய்ந்தது. மீண்டும் இரவு, 8:30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர் மழையால் நெல் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பனமரத்துப்பட்டியில் கனமழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.