/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்ற ஜெ., பேரவை துணை செயலர்
/
இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்ற ஜெ., பேரவை துணை செயலர்
இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்ற ஜெ., பேரவை துணை செயலர்
இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்ற ஜெ., பேரவை துணை செயலர்
ADDED : அக் 08, 2024 03:28 AM
ஓமலுார்: ஜெ.,பேரவை மாநில துணை செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் இ.பி.எஸ்.,சை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பூரை சேர்ந்த வெற்றிவேல், 54. இவரை நேற்று முன்தினம், ஜெ.,பேரவை மாநில துணை செயலராக நியமித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., அறிவித்தார். அதனை தொடர்ந்து வெற்றிவேல், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், இ.பி.எஸ்.,சை சந்தித்து மலர் கொத்து வழங்கி, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.ஓமலுார் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செய-லர்கள் அசோகன், கோவிந்தராஜ், தாரமங்கலம் மணிமுத்து, ஜெ.,பேரவை ஓமலுார் நகர செயலர் தளபதி, ஓமலுார் நகர செயலர் சரவணன், கருப்பூர் நகர செயலர் ஜீவா ஆகியோர் உடனி-ருந்தனர்.