/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை
/
ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் சிறை
ADDED : டிச 05, 2024 07:58 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:ரயில்களில் கோவில்களுக்கு செல்லும் பயணியரில் சிலர், ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றி
வழிபடுகின்றனர். இது அவர்களது நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தாலும், தீ விபத்து ஏற்பட்டு
பயணியர், ரயில்வே சொத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனால் கற்பூரம் ஏற்றுவது, அடுப்பு எரிப்பது உள்ளிட்ட-வையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை
கொண்டு செல்-லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பயணியருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம்
அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, ரயில்வே சட்டத்தில் இடம் உள்ளது. விதி மீறுவோர்
குறித்து பயணியரின் உதவி எண், 139ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.