ADDED : டிச 14, 2025 05:46 AM

அ நிறம் | அளவு
சேலம்,:அரசு ஊழியர் - ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.
அதில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்-டத்தை கொண்டு வருதல்; ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைதல்; பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல்; 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அர்த்தனாரி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கோவிந்தன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் திருமுரு-கவேள், ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சங்கர், பல்வேறு அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
