/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்வை கண்டித்து கான்ட்ராக்டர்கள் உண்ணாவிரதம்
/
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்வை கண்டித்து கான்ட்ராக்டர்கள் உண்ணாவிரதம்
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்வை கண்டித்து கான்ட்ராக்டர்கள் உண்ணாவிரதம்
ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்வை கண்டித்து கான்ட்ராக்டர்கள் உண்ணாவிரதம்
ADDED : மார் 01, 2024 01:14 AM

சேலம்:ஜல்லி, எம் - சாண்ட் விலை உயர்வை கண்டித்து, தமிழக நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் சேலத்தில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்று நடத்தினர்.
மாநில தலைவர் திருசங்கு கூறியதாவது:
கிரஷர் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் விலை ஒரே ஆண்டில் மூன்று முறை உயர்ந்துள்ளது.
இதனால் எடுத்த ஒப்பந்த பணிகளை செய்வதிலும், தொடர்ந்து புதிய பணிகளை செய்வதிலும் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் கனவு திட்டமான கிராம சாலைகள், பாலங்கள், கட்டுமான பணிகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலையேற்றத்தால் ஒப்பந்ததாரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
விலையேற்றத்தை கணக்கிட்டு, ஒப்பந்த விலை விகித பட்டியலில், 50 சதவீதம் ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்காலத்தில் அமைத்து, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தினால் மட்டுமே, வீடு கட்டும் கனவில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசின் கல்குவாரிகள் சட்டத்தால் தினமும், 8:00 மணி நேரம் தான் வேலை செய்ய முடியும். வாரத்தில் இரு நாட்கள் குவாரிகள் இயங்காது.
இதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, யூனிட் அளவு குறையும் போது விலை உயர்கிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அழைத்து பேசி தீர்க்க வேண்டும். ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் விலையை உயர்த்த வேண்டும்.
மேற்கு மண்டலத்தில் தான் சிண்டிகேட் அமைத்து விலை உயர்த்தப்பட்டுஉள்ளது.
அதனால் தமிழகம் முழுதும் ஒரே மாதிரி கட்டுமான பொருட்கள் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் அரசு சேர்த்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

