/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலிகளை அடகு வைத்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரின் புரோக்கர் கைது
/
போலிகளை அடகு வைத்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரின் புரோக்கர் கைது
போலிகளை அடகு வைத்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரின் புரோக்கர் கைது
போலிகளை அடகு வைத்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரின் புரோக்கர் கைது
ADDED : ஜன 29, 2025 07:50 PM
கெங்கவல்லி:கெங்கவல்லி கனரா வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து, 41 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரை தொடர்ந்து, அவருக்கு புரோக்கராக செயல்பட்டவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் உள்ள கனரா வங்கி கிளையில், கூடமலையை சேர்ந்த, வாடிக்கையாளர்கள் சேகர் மற்றும் பழனிசாமி ஆகியோர் 84 சவரன் நகைகளை அடகு வைத்து, 41 லட்சம் ரூபாய் பெற்றனர். இந்த நகைகள் குறித்து, அதன் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தபோது, அவை போலி நகைகள் என தெரிந்தன.
இதுகுறித்து கிளை மேலாளர் மித்ராதேவி புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரித்து, ஆத்துாரை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர், 45, என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கூடமலையைச் சேர்ந்த முதலி, 50, என்பவர் நகை மதிப்பீட்டாளருக்கு புரோக்கராக இருந்ததும், சேகர், பழனிசாமி மூலம், போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்ததும் தெரிந்தது.
கெங்கவல்லி போலீசார், பழனிசாமி, சேகர் ஆகியோரை சாட்சிகளாக சேர்த்து, முதலியும் கைது செய்யப்பட்டார்.