தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கபினி, கே.ஆர்.எஸ்., நீர்வரத்து அதிகரிப்பு

கபினி, கே.ஆர்.எஸ்., நீர்வரத்து அதிகரிப்பு

கபினி, கே.ஆர்.எஸ்., நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 09, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,291 கனஅடி-யாக இருந்த நிலையில், நேற்று, 7,531 கனஅடியாக அதிகரித்தது. அதேபோல் வினாடிக்கு, 6,774 கன

அடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, 10,757 கன

அடியாக அதிகரித்தது.

அதற்கேற்ப, 81.60 அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்மட்டம், 83 அடியாகவும், 39.50 அடியாக இருந்த கபினி நீர்மட்டம், 41 அடியாகவும் உயர்ந்தது. பருவமழை தீவிரம் அடைந்தால், இரு அணைகளின் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது முதல் கட்டமாக கபினி அணைக்கு வரும் நீரின் ஒரு பகுதி மேட்டூர் அணைக்கு திறக்க வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 76.29 அடி, நீர்இருப்பு, 38.35 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 40 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 27 கனஅடி-யாக குறைந்தது. வினாடிக்கு, 3,000 கனஅடியாக இருந்த குடிநீர் திறப்பு, 8 நாட்களுக்கு பின் நேற்று காலை, 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us