/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு
/
காடையாம்பட்டியில் 34 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகலில் அனல் காற்று வீசியதால், மக்கள், வாகன ஓட்டிகள் அவதியை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, நகரின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் லேசான மழை பெய்தது. நள்ளிரவு, 1:00 முதல், 2:10 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கோடை மழை கொட்டியது.
அதிகபட்சமாக காடையாம்பட்டியில், 34 மி.மீ., மழை பதிவானது. மேட்டூர், 23.6 மி.மீ., சேலம், 20.3, ஆனைமடுவு, 17, ஓமலுார், 16, ஏற்காடு, 13, சங்ககிரி, 9, கரியகோவில், 2, இடைப்பாடி, 1.4 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்தது.
மேட்டூரில் 2 நாளில் 42.6 மி.மீ.,மேட்டூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 முதல், அதிகாலை, 3:00 மணி வரை மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் மக்கள் வீடுகளில் வளர்த்த வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. கடந்த, 5ம், நேற்றும் என, இரு நாட்களில், 42.6 மி.மீ., மழை மேட்டூர் அதன் சுற்றுப்பகுதியில் பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்தது.

