ADDED : ஜூலை 16, 2025 01:45 AM
சேலம், கர்மவீரர் காமராஜரின், 123வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, சேலம் ஆனந்தாபாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு, பா.ஜ.,வின், சேலம் மாநகர், மாவட்டம் சார்பில், அதன் தலைவர் சசிகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயலர்கள் கரிகாலன், ராம்குமார், மண்டல தலைவர்கள் டவுன் ஜெயஸ்ரீ, சீலநாயக்கன்பட்டி காளிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.
மாநகர் காங்., சார்பில், அதன் தலைவர் பாஸ்கர் மாலை அணிவித்தார். துணை மேயர் சாரதாதேவி, பொருளாளர் ராஜகணபதி, துணைத்தலைவர் திருமுருகன், பொது செயலர் கோபிகுமரன் உள்பட பலர் பங்கேற்றனர். பா.ம.க., சார்பில், மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் மாலை அணிவித்தார்.
மாவட்ட செயலர் கதிர்ராஜரத்தினம், மாவட்ட தலைவர் கோவிந்தன், உழவர் பேரியக்க தலைவர் செந்தில், மாவட்ட வன்னியர் சங்க செயலர் பூபதி உள்பட பலர் உடனிருந்தனர். த.மா.கா., மாநகர், மாவட்ட தலைவர் உலகநம்பி தலைமையில் அக்கட்சியினர், மாலை அணிவித்தனர். அதேபோல் பல்வேறு கட்சி
யினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
பனமரத்துப்பட்டியில், காங்., சார்பில், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கொண்டாடப்பட்டது. தாரமங்கலத்தில், நகர காங்., சார்பில், தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கினர். ஓமலுாரில், த.மா.கா., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் கட்சியினர், இனிப்பு வழங்கினர்.
மேட்டூர் காமராஜர் மன்ற, 48வது ஆண்டு விழா மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சின்னபார்க் காமராஜர் சிலைக்கு, மன்ற துணைத்தலைவர் சிகாமணி மாலை அணிவித்தார். அதேபோல் வி.சி., மாவட்ட செயலர் மெய்யழகன் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர்.சேலம் மேற்கு மாவட்ட காங்., சார்பில், சங்ககிரியில், சேலம் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தலைமையில், காமராஜரின் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.