/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி விநாயகா மிஷனில் 'கனா ஒலிம்பிக்ஸ் - 2025' நிகழ்ச்சி

ADDED : ஏப் 28, 2025 07:10 AM
சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், கண் ஒளியியல் பிரிவு மூலம், பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், பார்வை குறைபாடு உள்ளவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், 'கனா ஒலிம்பிக்ஸ் - 2025' எனும் விளையாட்டு, கலை நிகழ்வு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடந்தது.
கல்லுாரி டீன் செந்தில்குமார், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழன், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை, ஒலிம்பிக் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு வெளி, உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடனம், பாடல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள், தனித்திறனை வெளிப்படுத்தினர். முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை, கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர், பேராசிரியை தமிழ் சுடர், உதவி பேராசிரியர்கள் சூர்யா, ஜெகதீஸ்வரி, லாவண்யா, அக் ஷயா செய்திருந்தனர்.