ADDED : ஆக 17, 2026 03:08 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஆடிப்பூரத்தை ஒட்டி, ஓமலுார் செவ்வாய்சந்தை அருகே உள்ள ஆதிபராசக்தி பீடத்தில் கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது.
ஏராளமான பக்தர்கள், வேப்பிலையுடன் கூடிய கஞ்சி கலயத்தை, தலையில் வைத்துக்கொண்டு, மேள, தாளம் முழங்க, கடைவீதி வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு, மேல்மருத்துவத்துார் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், நாகம்மாள் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்ன-தானம் வழங்கப்பட்டது.
