ADDED : ஜூலை 15, 2024 01:14 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அம்மாபேட்டை வள்ளலார் மடாலயத்தில் அண்ணா-துரை நற்பணி மன்றம் சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, 101வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
செயலர் குமார-சாமி தலைமை வகித்தார். தலைவர் சேகர், பொருளாளர் ஞானசே-கரன் முன்னிலை வகித்தனர்.அதில், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 500 பேருக்கு காலை உணவு வழங்கினார். பள்ளி மாணவர், 200 பேருக்கு டிபன் பாக்ஸ் வழங்கினார்.
