ADDED : ஆக 04, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தி.மு.க.,வின், மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் அறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதி, 7ம் ஆண்டு நினைவு நாள், வரும், 7ல் நடக்க உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, ஈ.வெ.ரா., சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா பூங்கா சென்று, அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இதில் மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்.