/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணப்பிரச்னையில் கடத்தப்பட்ட டிரைவர் மீட்பு கட்டட தொழிலாளி கைது; பெண்ணுக்கு வலை

ADDED : அக் 07, 2024 03:04 AM
மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்த டிரைவர் மேகநாதன், 33. தர்மபுரியில் சில பங்குதாரர்களை சேர்த்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார். தர்மபுரியை சேர்ந்த ஆசிரியை பாரதி, 40. இவர் மேகநாதனுக்கு வட்டிக்கு பணம் கொடுக்க நிதி கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் நேற்று மேகநாதன் வீட்-டுக்கு சென்ற பாரதி, 'என் பணம், 22 லட்சம் ரூபாயை கொடுங்கள்' என கேட்டுள்ளார். அதற்கு மேகநாதன், 'தற்போது பணம் இல்லை. 10 நாட்கள் கழித்து தருகிறேன்' என கூறினார்.
இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் பாரதி, மேட்டூர் அனல்மின் நிலையம், 4 ரோட்டில் விடும்படி மேகநாதனிடம் கேட்டார். அவரும், 'பல்சர்' பைக்கில், காலை, 10:45 மணிக்கு பாரதியை, 4 ரோட்டுக்கு அழைத்துச்சென்றார். அப்-போது பொலிரோ ஜீப்பில் இருந்த சிலர், மேகநாதனை கட்டாய-மாக ஜீப்பில் ஏற்றி சேலம் சாலையில் ஓட்டி சென்றனர். அந்த ஜீப் பின்புறம், மற்றொரு நபருடன் பாரதி, 'பல்சர்' பைக்கில் சென்றார்.இந்நிலையில் மர்ம கும்பல் தம்பியை ஜீப்பில் கடத்தி சென்ற-தாக, மேகநாதனின் அண்ணன் சதீஸ்வரன், மேட்டூர் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்-டிபட்டி கட்டட தொழிலாளி முரளி, 40, என்பவரை போலீசார் கைது செய்து மேகநாதனை மீட்டனர். தவிர கடத்தல் வழக்கில் பாரதி உள்பட, 6 பேரை தேடுகின்றனர்.