ADDED : செப் 25, 2026 05:40 AM
சேலம்; சேலம், சீலநாயக்கன்பட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கணேசன், 35. இவரை இரு நாட்களுக்கு முன், கோவில்பட்டியை சேர்ந்த ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்றதாக, அவரது தாய் பூர-ணம்மாள், 65, புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்தனர்.
அதில் கணேசனின் உறவினர்கள், அறக்கட்-டளை பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்து வந்ததும், அவர்களிடமிருந்து, ஐ.டி.,யை தெரிந்து கொண்ட கணேசன், 2 லட்சம் ரூபாய், அவரது நண்பர் விக்னேஷ், 1.6 லட்சம் ரூபாய் எடுத்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சேலம் வந்த அக்கும்பல், விக்னேைஷ பிடித்தபோது, அவர் பணம் கொடுத்ததால் விட்டுவிட்டதும், கணேசன், 2 லட்சம் ரூபாயை தராததால் காரில் கடத்திச்-சென்றதும் தெரிந்தது.இதனால் அவரை மீட்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அக்கும்பல் கணேசனை நாமக்-கல்லில் விட்டுவிட்டு தப்பியது. தொடர்ந்து சேலம் வந்த கணேசனிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
