'கிரையோ அப்லேஷன் முறையில் 50க்கும் மேற்பட்டஅறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.ஹெச்., சாதனை'
'கிரையோ அப்லேஷன் முறையில் 50க்கும் மேற்பட்டஅறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.ஹெச்., சாதனை'
ADDED : மே 27, 2026 04:03 AM

சேலம்:கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டல்(கே.எம்.சி.ஹெச்.,) சார்பில், சேலத்தில், 2ம் முறை, 'இருதய துடிப்பு மருத்துவத்தின் புதிய பரிணாமம்' கருப்பொருளில், 'இருதய துடிப்பு கருத்தரங்கு - 2026' ரேடிசன் ேஹாட்டலில் நடந்தது. கே.எம்.சி.ஹெச்.,ன், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் லாரன்ஸ் ஜேசுராஜ் தலைமை வகித்தார்.
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், ''சீரற்ற இருதய மேலறை துடிப்பு சிகிச்சைக்கான, 'கிரையோ அப்லேஷன்' முறையில், 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து, கே.எம்.சி.ஹெச்., புது சாதனை படைத்துள்ளது. நாடு முழுதும் இந்த மைல் கல்லை எட்டிய, 5 முன்னணி மருத்துவமனைகளின் தனிச்சிறப்பு மிக்க பட்டியலில், கே.எம்.சி.ஹெச்., இணைந்துள்ளது,'' என்றார். கே.எம்.சி.ஹெச்., நிறுவன செயல் இயக்குனர் அருண் என்.பழனிசாமி பேசுகையில், ''இருதய மருத்துவம், எலக்ட்ரோ பிசியாலஜியின் எதிர்காலத்தை ஆராயவும் ஒரு சிறந்த களமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஹைதராபாத் ஏ.ஐ.ஜி., மருத்துவமனை மருத்துவர் நரசிம்மன், கொச்சி லிசி மருத்துவமனை மருத்துவர் ஜாபிர் அப்துல்லா குட்டி, திருவனந்தபுரம் ஸ்ரீசித்ர திருநாள் நிறுவன பேராசிரியர் நாராயணன் நம்பூதிரி, தானே ஜூபிடர் மருத்துவமனை மருத்துவர் ஆஷிஷ் நபார், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் கதிரேசன் உள்ளிட்ட முன்னணி மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்றனர்.
