நாலெட்ஜ்' முன்னாள் மாணவர் சங்க புதிய சென்னை கிளை தொடக்கம்
நாலெட்ஜ்' முன்னாள் மாணவர் சங்க புதிய சென்னை கிளை தொடக்கம்
ADDED : மார் 25, 2026 06:51 AM
சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க, புதிய சென்னை கிளை கடந்த, 14ல் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை, அதன் சுற்றுப்
பகுதிகளில் பணிபுரியும், 250க்கும் மேற்பட்ட, கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். அச்சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன், சங்க செயல்பாடு, அதன் பொறுப்பாளர்களின் பணி குறித்து எடுத்துரைத்தார். செயலர் தணிகைவேல் முத்துசாமி, சங்கத்தின் கடந்தகால செயல்பாடுகளை விளக்கினார்.
புரவலரான, நாலெட்ஜ் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், இந்த இணைப்பை பயன்படுத்தி கல்லுாரி வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பங்காற்ற, முன்னாள் மாணவர்களை வலியுறுத்தினார். சங்க தலைவர் விசாகவேல், முன்னாள் மாணவர்கள் சாதித்துள்ள சிறப்புகளை
விளக்கினார்.
நாலெட்ஜ் கல்லுாரியின் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், துணைத்தலைவர்கள், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், துணை செயலர் சுரேந்தர், பொருளாளர் கதிரேசன், துணை ஒருங்கிணைப்பாளர்கள்
பங்கேற்றனர்.
