தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சந்தேகத்துக்கு இடமின்றி ஓட்டு எண்ண அறிவு ரை

சந்தேகத்துக்கு இடமின்றி ஓட்டு எண்ண அறிவு ரை

சந்தேகத்துக்கு இடமின்றி ஓட்டு எண்ண அறிவு ரை


ADDED : ஏப் 29, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி, சங்ககிரி தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் அலுவலர்களுக்கு, சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. தொகுதி தேர்தல் அலுவலர் கேந்திரியா பயிற்சி அளித்து பேசியதாவது:

சங்ககிரி தொகுதி ஓட்டுகள், 14 மேசைகளில், 25 சுற்றுகளில் எண்ணப்படும். இதில் பணிபுரியும் அலுவலர்கள், வேட்பாளர்கள் சார்பில் வரும் முகவர்

களுக்கு தெரியும்படி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காட்ட வேண்டும். ஒவ்வொரு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை அதற்கான படிவங்களில் தவறின்றி எழுத வேண்டும். இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனே தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்காக உள்ள பொறியாளர்களை வைத்து சரிசெய்யப்படும். எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதபடி, ஓட்டு எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டு எண்ண பயிற்சி

கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணுதல் குறித்த பயிற்சி முகாம், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. மேட்டூர் தேர்தல் அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி, பயிற்சி அளித்தார். இதில் பொதுப்பணி, உள்ளாட்சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த, 50 அலுவலர்கள் பங்கேற்றனர். அடுத்து இறுதி கட்ட பயிற்சி முகாம் ஓரிரு நாட்கள் நடக்கும். அதில், எத்தனை பேர் ஓட்டு எண்ணும் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் என்ற விபரம் தெரிவிக்கப்படும் என, தேர்தல் அலுவலர் சுகுமார்

தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us