/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
9 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை கூத்தம்பாளையம் மக்கள் சாலை மறியல்
/
9 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை கூத்தம்பாளையம் மக்கள் சாலை மறியல்
9 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை கூத்தம்பாளையம் மக்கள் சாலை மறியல்
9 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை கூத்தம்பாளையம் மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 01, 2024 01:35 AM
9 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை
கூத்தம்பாளையம் மக்கள் சாலை மறியல்
மகுடஞ்சாவடி, டிச. 1-
மகுடஞ்சாவடி, அ.புதுார், கூத்தம்பாளையத்தில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அங்கு, 9 மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், நேற்று மதியம், 12:00 மணிக்கு, இளம்பிள்ளை - இடைப்பாடி பிரதான சாலை, கூத்தம்பாளையம் பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அரசு பஸ் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'குடிநீர் பிரச்னை குறித்து பலமுறை தலைவரிடம் புகார் அளித்தோம். 9 மாதங்களாகவே, 4 கி.மீ.,ல் உள்ள மகுடஞ்சாவடி ரயில்வே கேட், 3 கி.மீ.,ல் உள்ள ஒண்டிப்பனை பகுதிகளுக்கு சென்று, குடிநீர் பிடித்து வருகிறோம். சில நேரங்களில் விலை கொடுத்து வாங்குகிறோம். இதே நிலை தொடர்வதால், மறியலில் ஈடுபட்டோம்' என்றனர்.
இதுகுறித்து, அ.புதுார் ஊராட்சி தலைவர் ஐயமுத்து கூறுகையில், ''ஊராட்சி சார்பில் ஆழ்துளை குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் குழாயை அகற்றி வேலை செய்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு காரணமே குடிநீர் வாரிய அதிகாரிகள்தான். இதுகுறித்து முதல்வர், கலெக்டர், பி.டி.ஓ.,வுக்கு மனு அனுப்பியுள்ளேன்,'' என்றார்.

