/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கே.ஆர்.எஸ்., - கபினி நீர் திறப்பு குறைப்பு மேட்டூர் அணை நீர் வரத்து சரிவு
/
கே.ஆர்.எஸ்., - கபினி நீர் திறப்பு குறைப்பு மேட்டூர் அணை நீர் வரத்து சரிவு
கே.ஆர்.எஸ்., - கபினி நீர் திறப்பு குறைப்பு மேட்டூர் அணை நீர் வரத்து சரிவு
கே.ஆர்.எஸ்., - கபினி நீர் திறப்பு குறைப்பு மேட்டூர் அணை நீர் வரத்து சரிவு
ADDED : டிச 19, 2024 07:24 AM
மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 6,268 கனஅடியாக சரிந்தது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணை மொத்த நீர்மட்டம், 124.8 அடி. நீர் இருப்பு, 49.45 டி.எம்.சி., மைசூரு மாவட்டம், கபினி அணை மொத்த நீர்மட்டம், 65 அடி; நீர்இருப்பு, 19.51 டி.எம்.சி., நேற்று கே.ஆர்.எஸ்., நீர்மட்டம், 124.8 அடி, கபினி நீர்மட்டம், 60.89 அடியாக இருந்தது. இரு அணை-களில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கர்நாடகாவின் டி.நரசிபுரா பகுதியில் கலந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. கடந்த, 16ல் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 5,313 கனஅடி, கபினி அணையில் இருந்து, 875 கனஅடி என மொத்தம், 6,188 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்தது. அதற்கேற்ப நேற்று கே.ஆர்.எஸ்.,ல், 2,791 கனஅடி, கபினியில், 1,175 கனஅடி என மொத்தம், 3,966 கனஅடி நீர் மட்டுமே கர்நா-டகா காவிரி கரையோர பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இரு அணைகளில் திறக்கப்பட்ட நீரில் பாசனத்துக்கு போக மீதமுள்ள நீர் மட்டுமே தமிழகத்துக்கு வருகிறது. வரும் நாட்களில் கர்நா-டகா அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணைமேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் நீர் திறப்பு குறைந்த நிலையில், தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்தது.இதனால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,368 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 6,268 கனஅடியாக சரிந்தது. குடிநீர், பாசனத்துக்கு, 1,000 கனஅடி, கால்வாயில், 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது.நேற்று அணை நீர்மட்டம், 118.79 அடி, நீர்இருப்பு, 91.55 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னமும், 1.5 அடி, நீர் இருப்பு, 2 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. நீர்வரத்து குறைந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்ப தாமதமாகும் நிலை உள்ளது.