/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச கராத்தேவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
சர்வதேச கராத்தேவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சர்வதேச
அளவில், கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த, 9, 10ல், கோவாவில்
நடந்தது. அதில் சேலத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளில் படிக்கும், 41
பேர் பங்கேற்றனர். அவர்கள், தனி கட்டா, குழு கட்டா, தனிநபர் குமித்
உள்ளிட்ட பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தி, 34 தங்கம், 28
வெள்ளி, 20 வெண்கலம் வென்றனர்.
தொடர்ந்து சேலம் திரும்பிய
அவர்களுக்கு பாராட்டு விழா சேலம் ராமகிருஷ்ணா சாலையில் நேற்று
நடந்தது. அதில் பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள், சாதனை படைத்த மாணவ,
மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். கராத்தே
பயிற்சியாளர்கள் விச்சு, மணி, அருண், பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

