/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷக திருப்பணி: பழைய கொடிமரம் அகற்றம்
/
கும்பாபிேஷக திருப்பணி: பழைய கொடிமரம் அகற்றம்
ADDED : அக் 21, 2024 07:05 AM
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், 2006ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த மூலவர் பெரிய நாயகி அம்மன், கரபுரநாதரை தவிர ராஜகோபுரம், மற்ற பரிவார தெய்வங்கள் அனைத்துக்கும், 2022 ஆக., 22ல் பாலாலயம் செய்து கும்பாபிேஷக திருப்பணி தொடங்கப்பட்டது.
இரு ஆண்டுகளாக நடந்து வரும் இப்பணியின் ஒரு பகுதியாக உபயதாரர் ஒருவர், புது கொடி மரம் பிரதிஷ்டை செய்வதற்கு, 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 அடி தேக்கு மரம் எடுத்து வரப்பட்டு தச்சர்களால், 13 அடி உயரத்தில் பட்டைகளாக செதுக்கி சீர்செய்து கொடி மரம் தயார்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விமலா, தக்கார் விமலா, ஆய்வாளர் பத்மாவதி, செயல் அலுவலர் சோழமாதேவி, கொடி மர உபயதாரர் மீனாட்சி சுந்தரம், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் செம்பு தகடுகளை பிரித்து, பழைய கொடி மரம் தோண்டி எடுத்து அகற்றப்பட்டது. நவ., 14ல் புது கொடி மரம் பிரதிஷ்டை செய்ய இலக்கு நிர்ணயித்து, கோவில் அம்மன் சன்னதி மண்டப தரைத்தளம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

