ADDED : நவ 13, 2026 04:41 AM
ஆத்துார்; கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மூர்த்தி, 26. மக்காச்சோளம், நெல் வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த அக்., 9ல், மஞ்சினியை சேர்ந்த, மக்காச்சோள வியாபாரி சசிகுமாரை பார்க்க, பைக்கில் சென்றார். அப்போது காரில் வந்த, 7 பேர், மூர்த்தியை கடத்தி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
மறுநாள், சேலம், சீலநாயக்கன்பட்டியில் மூர்த்தியை இறக்கிவிட்டு சென்றனர். தொடர்ந்து அவர் புகாரை அடுத்து, பெத்தநாயக்கன்பாளையம் துரைபாண்டியன், 26, உள்பட, தலைவாசல், ஆத்துார், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை சேர்ந்த, 7 பேரை, அக்., 18ல், ஆத்துார் ஊரக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபரான துரைபாண்டியன் மீது, ஏத்தாப்பூர் போலீசில், கொலை முயற்சி வழக்கு உள்ளது. இதனால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., குத்தாலிங்கம் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் இளம்பகவத் நேற்று உத்தரவிட்டார். இதனால் துரை பாண்டியன், சேலம் மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.சேலம், பொன்னம்மாபேட்டை, சக்தி நகரை சேர்ந்தவர் சடையன் என்ற கிரி, 26. இவர் மீது அடிதடி, வழிப்பறி வழக்குகள் இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
