ADDED : செப் 26, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
சேலம்; சேலம் - மல்லுார் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே ஒருவர் இறந்து கிடப்பதாக, நேற்று முன்திம் நள்ளிரவு, சேலம் ரயில்வே போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீசார் விசாரித்ததில், ரயிலில் அடிப்பட்டு இறந்தவர், சேலம், கொண்டலாம்பட்டியில் தங்கி பட்டுத்தறி நெசவு செய்யும் தொழிலாளி அண்-ணாமலை, 44, என்பதும், அவரது மனைவி, குழந்-தைகள், சூரமங்கலத்தில் வசிப்பதும் தெரிந்தது. அவர், இரவு, 10:15 மணிக்கு தண்டவாளப்பகு-தியை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, பாலக்காடு - சென்னை ரயிலில் அடிபட்டு உயிரி-ழந்ததும் தெரிந்தது. உடலை கைப்பற்றி, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
