ADDED : செப் 20, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்:தாரமங்கலம்,
ஆறுபடை நகரை சேர்ந்தவர் மாணிக்கம், 46. தினசரி மார்க்கெட்டில் மூட்டை
துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். சில மாதங்களாக மனநிலை
சரியின்றி சிகிச்சை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை,
மார்க்கெட் சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் பஸ்
ஸ்டாண்ட் அருகே தெப்பக்குளத்தில், மாணிக்கம் உடல் மிதப்பதாக தகவல்
கிடைக்க, அவரது மனைவி சாந்தி சென்று பார்த்தார். அவர் தவறி விழுந்து
இறந்திருக்கலாம் என, சாந்தி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
