ADDED : நவ 28, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:நாமக்கல்
மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மதலைமுத்து, 53.
கட்டனாச்சம்பட்டியில் பழைய இரும்பு விற்கும் கடை வைத்துள்ளார்.
நேற்று கடை குடோனில் இருந்த பொருட்களை, சேலத்தில் உள்ள முருகன் இரும்பு
கடையில் இருந்து வந்த, 5 தொழிலாளர்கள், லாரியில்
ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு இரும்பு, மேலே தாழ்வாக சென்ற
மின்கம்பி மீது உரசியது.
இதில் மின்சாரம் பாய்ந்து, 3
தொழிலாளர்கள் துாக்கி வீசப்பட்டனர். இதில் சேலம் மாவட்டம்
ஆட்டையாம்பட்டியை சேர்ந்த அய்யனார், 40, சம்பவ இடத்தில்
உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்த பிரதாப், பீஹார் மாநிலத்தை சேர்ந்த விஜி
படுகாயம் அடைந்தனர். அவர்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
