தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/'போதை'யில் தகராறு தொழிலாளி தீக்குளிப்பு

'போதை'யில் தகராறு தொழிலாளி தீக்குளிப்பு

'போதை'யில் தகராறு தொழிலாளி தீக்குளிப்பு


ADDED : அக் 15, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஆட்டையாம்பட்டி அருகே கண்டர்குலமாணிக்கம், தேவன்-காடை சேர்ந்தவர் திருவேங்கடம், 55. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

திருவேங்கடம் வீட்டில் தறி அமைத்து தொழில் செய்து வருகிறார். அவர், நேற்று மதியம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அவ-ரது மகன்கள், தந்தையை கண்டித்தனர். இதில் வேதனை அடைந்த திருவேங்கடம், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்-கொண்டார். அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் பரிசோதனையில், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்ப-டுகிறது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us