ADDED : மே 02, 2026 05:41 AM
பனமரத்துப்பட்டி; நரசிம்மர் ஜெயந்தி விழாவை ஒட்டி, மல்லுார், சுதர்சன் நகரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மூலவர், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அங்கு சிறப்பு யாகம் நடத்தி, மேள, தாளம் முழங்க, லட்சுமி நரசிம்மருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. 'கோவிந்தா' கோஷத்-துடன் பக்தர்கள் வழிபட்டனர்.சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த, மூலவர் லட்சுமி நரசிம்மரை, ஏராளமான பக்தர்கள் வழி-பட்டனர்.
அதேபோல் சேலம், கருப்பூர் இஸ்கான் கோவிலில் நேற்று முன்தினம் நரசிம்ம ஜெயந்தி விழாவில், 'நரசிம்மா கதா' தலைப்பில் சொற்-பொழிவு நடந்தது. நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது.
ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், லட்சுமி நரசிம்மருக்கு அபிேஷக பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் அருள்பா-லித்தார். நரசிங்கபுரம், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
