/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., மனு
/
நிலங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., மனு
நிலங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., மனு
நிலங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., மனு
ADDED : அக் 01, 2024 01:39 AM
நிலங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்
மத்திய அமைச்சரிடம் பா.ம.க.,- எம்.எல்.ஏ., மனு
வீரபாண்டி, அக். 1-
'சேலம் உருக்காலைக்கு கையப்படுத்தப்பட்டு, பயன்பாடில்லாத நிலங்களை உரியவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம், பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள் மனு வழங்கினார்.
கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக நேற்று சேலம் உருக்காலையை ஆய்வு செய்ய வந்த குமாரசாமியிடம், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.
இதையடுத்து, நிருபர்களிடம் அருள் கூறியதாவது: சேலம் உருக்காலைக்கு என அழகுசமுத்திரம் மற்றும் தற்போது ஆலை கட்டப்பட்டுள்ள பகுதி என இப்பகுதி மக்களிடம் இருந்து, 1970களில் மிகவும் குறைந்த விலைக்கு, 4,700 ஏக்கர் நிலங்களை பெற்று கையகப்படுத்தியுள்ளனர். இதில் தற்போது வரை, 700 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 4,000 ஏக்கர் நிலம் சும்மா கிடக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, உரியவர்களிடம் வழங்க வேண்டும். உருக்காலை அமைந்துள்ள பகுதியின் நடுவே, இளம்பிள்ளை பிரதான சாலை மற்றும் தாரமங்கலம் பிரதான சாலையை இணைக்கும் வகையில், பிரத்யேகமாக இணைப்பு சாலை அமைத்து மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் போது அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி பகுதிகளின் மயானம் இருந்த நிலங்களும் உருக்காலை வசம் சென்று விட்டது. தற்போது வரை இந்த இரண்டு ஊர் மக்களும் மயான வசதி இன்றி உள்ளனர். அதை உருக்காலை நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.