/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் மீண்டும் நிலச்சரிவு: நிரந்தர சீரமைப்புக்கு வலியுறுத்தல்
/
ஏற்காட்டில் மீண்டும் நிலச்சரிவு: நிரந்தர சீரமைப்புக்கு வலியுறுத்தல்
ஏற்காட்டில் மீண்டும் நிலச்சரிவு: நிரந்தர சீரமைப்புக்கு வலியுறுத்தல்
ஏற்காட்டில் மீண்டும் நிலச்சரிவு: நிரந்தர சீரமைப்புக்கு வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2025 02:33 AM
ஏற்காடு,ஏற்காடு மலைப்பாதையில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்ட இடத்தில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால், நிரந்தர சீரமைப்பு பணி மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தினர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து, 7 கி.மீ.,ல் உள்ள குண்டூர், தெப்பக்காடு கிராமங்கள் உள்ளன. அப்பகுதிக்கு செல்லும் மலைப்பாதையின் ஒரு இடத்தில், சில வாரங்களுக்கு முன் பெய்த மழையால் சிறு நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், எம்.சாண்ட் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஏற்காடு அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதில் குண்டூர் செல்லும் சாலையில், சீரமைப்பு பணி செய்த இடத்தில் மழைநீர் அதிகமாக ஓட, அந்த மூட்டைகள் சரிந்து மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அச்சாலையில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால் இச்சாலையை நிரந்தரமாக சீரமைக்க, மலைக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிவச்செல்வியிடம் கேட்டபோது, ''இடத்தை ஆய்வு செய்தோம். நாளை(இன்று) அச்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி நடக்கும். பின் நிரந்தர சீரமைப்பு பணிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.