ADDED : அக் 11, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
சேலம்:நாமக்கல் மாவட்டம், சேந்தமங்லகம் அடுத்த போடிநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ரவிச்சந்திரன், 22. சேலம், இரும்பாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படிக்கும் இவர், கல்லுாரி விடுதியில் தங்கி உள்ளார். கடந்த 5ம் தேதி இரவு, 12:00 மணி வரை லேப்டாப் பயன்
படுத்தி படித்த பின், அதை மேஜை மேல் வைத்துவிட்டு, துாங்க சென்றுவிட்டார்.
மறுநாள் காலை, 11:00 மணியளவில் பார்த்தபோது, லேப்டாப்பை காணவில்லை. சக மாணவர்களிடம் விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை. அதன் மதிப்பு, 50,000 ரூபாய். இதுபற்றி, இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். மாணவர் புகார்படி, இரும்பாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
