/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அட்சய திரிதியை முன்னிட்டு 'தங்க தட்டுவடை செட்' அறிமுகம்
/
அட்சய திரிதியை முன்னிட்டு 'தங்க தட்டுவடை செட்' அறிமுகம்
அட்சய திரிதியை முன்னிட்டு 'தங்க தட்டுவடை செட்' அறிமுகம்
அட்சய திரிதியை முன்னிட்டு 'தங்க தட்டுவடை செட்' அறிமுகம்
ADDED : மே 09, 2024 06:47 AM
சேலம் : சேலம், அல்லிக்குட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், 38. அம்மாபேட்டை பிரதான சாலையில், 'துருவன் தட்டுவடை செட்' கடை நடத்துகிறார். அவர் அட்சய திரிதியை முன்னிட்டு, தங்க தட்டுவடை செட், தங்க பன் செட், தங்க முறுக்கு செட் ஆகியவற்றை அறிமுகம் செய்து, முன்பதிவை தொடங்கி உள்ளார்.
தங்க தட்டு வடை செட்டில் முந்திரி, பாதாம், கேரட், பிட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றின் துருவல், பேரீச்சை, உலர் திராட்சை, குல்கந்த், செரிப்பழம் ஆகியவற்றின் மீது தங்க பேப்பரை வைத்து சாப்பிட வழங்குகிறார். இதை, 120 ரூபாய்க்கு விற்கிறார். இதற்குரிய முன்பதிவை, ஒரு வாரத்துக்கு முன் தொடங்கி நடக்கிறது. அதேபோல் தங்க பன் செட், 150 ரூபாய், முறுக்கு செட், 130 ரூபாய்க்கு விற்கிறார். ஸ்ரீதர் கூறுகையில், ''அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாதவர்களை, தங்கத்தை உண்ணச்செய்யவே இந்த விற்பனை. இதுபோன்ற விற்பனை முதல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஹைதராபாத்தில் இருந்து, தங்க பேப்பர் தலா, 70 ரூபாய்க்கு மொத்தமாக வாங்கி வந்துள்ளேன். தட்டு வடையில் உள்ள பிற பொருட்களின் மதிப்பு, 30 ரூபாய் என வைத்துக்கொண்டால், எனக்கு இந்த விற்பனை மூலம் செட்டுக்கு, 20 ரூபாய் லாபம் கிடைக்கும். தட்டுவடையில் பயன்படுத்தும் தங்க பேப்பர், ஏற்கனவே ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், கேக் உள்ளிட்ட உணவு வகைகளில் பயன்படுத்துவதால், தட்டுவடையில் பயன்படுத்தி உள்ளேன்,'' என்றார்.