/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீதிமன்ற பணியை புறக்கணித்த வக்கீல்கள் சேலம், நவ. 22- ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்டார். இதை கண்டித்து, சேலம் வக்கீல் சங்கத்தினர், நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். குறிப்பாக, 3,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணிக்கு செல்லவில்லை. மேலும் வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி, வக்கீல்களை தாக்குபவர்

ADDED : நவ 22, 2024 01:33 AM
நீதிமன்ற பணியை புறக்கணித்த வக்கீல்கள்
சேலம், நவ. 22-
ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்டார். இதை கண்டித்து, சேலம் வக்கீல் சங்கத்தினர், நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். குறிப்பாக, 3,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணிக்கு செல்லவில்லை. மேலும் வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி, வக்கீல்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால் நீதிமன்றத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. இன்றும் பணி புறக்கணிப்பு தொடர்கிறது.
அதேபோல் மேட்டூர் அணை வக்கீல்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஜேம்ஸ் சார்லஸ், செயலர் செந்தில்குமார், பொருளா ளர் விஜயராகவன், வக்கீல்கள் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட வக்கீலுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அங்கு தாசி ல்தார் ரமேஷிடம், மனு வழங்கினர். வாழப்பாடி வக்கீல் சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, பேரணியாக சென்ற வக்கீல்கள், அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் வீரமுத்து, செயலர் சண்முகநாதன், பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் சங்ககிரி, இடைப்பாடியில், நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் புறக்கணித்தனர்.