தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கன்றை கொல்ல முயன்ற சிறுத்தை விரட்டியடிப்பு

கன்றை கொல்ல முயன்ற சிறுத்தை விரட்டியடிப்பு

கன்றை கொல்ல முயன்ற சிறுத்தை விரட்டியடிப்பு


ADDED : நவ 05, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், கண்ணாமூச்சி வனப்பகுதியில் இரு வாரங்களாக ஒரு சிறுத்தை சுற்றித்திரிகிறது. அந்த சிறுத்தை, மலை அடிவார கிராமத்தில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. மூலக்கடை அடுத்த இடமலைகாடு விவசாயி பொன்னுசாமி, 60. இவர் நேற்று முன்தினம், 3 பசு மாடு, ஒரு கன்றுக்குட்டியை முற்றத்தில் கட்டியிருந்தார்.

நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு அப்பகுதியில் புகுந்த சிறுத்தை, கன்றுகுட்டியின் கழுத்தை கடித்து கொல்ல முயன்றது. அங்கிருந்த மாடுகளின் சத்தம் கேட்டு விழித்த பொன்னுசாமி, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். உடனே பொன்னுசாமி, அவரது குடும்பத்தினர், பேட்டரி வெளிச்சத்தை அடித்து, சத்தம் போட, அங்கிருந்து சிறுத்தை ஓடியது. காயத்துடன் கன்றுக்குட்டி உயிர் தப்பியது. மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். சிறுத்தை சுற்றித்திரிவது, அப்பகுதி கிராம மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரசிங்கபுரம், 6வது வார்டில் நாய்கள் கடித்துக்

குதறியதில், ஒரு ஆட்டு குட்டி பலியானது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us