தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தயார்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தயார்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தயார்


ADDED : மே 15, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்; தமிழக முதல்வர் விஜய் உத்தரவுப்படி, சேலம் மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தற்-போது தயாராக உள்ளது. அதன் போலீசார், அதற்-கான வாகனத்தை, போலீஸ் கமிஷனர் அலுவல-கத்தில் கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று பார்-வையிட்டார்.

இதுகுறித்து கமிஷனர் அனில்குமார் கிரி கூறிய-தாவது:

சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி கண்காணிப்பில், எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., போலீஸ் என, 4 பேர் குழுவினர், இப்படையில் இடம் பெறுவர். இவர்களுக்கு வாகனம், கேமரா உள்-ளிட்ட இதர வசதிகள் தயாராக உள்ளன.இக்குழுவினர் குற்றம் நடக்க வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை பெண்களுக்கு உருவாக்குதல், சட்ட விரோத மற்றும் பெண்க-ளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்தல், சமூகத்தின் பல்-வேறு தரப்பினரை இணைத்து பெண்களின் பாது-காப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட உள்ளனர். மாநகரில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

பாதிக்கப்படும் பெண்கள், கட்டுப்பாடு அறை எண்: 100ல் தொடர்பு கொண்டு புகார்களை தெரி-வித்தால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை-யினர், உடனே சம்பவ இடத்துக்கு வந்து நடவ-டிக்கை எடுப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us