ADDED : அக் 19, 2026 01:25 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று, பச்சப்பட்டி அம்பேத்கர் சிலை அருகே ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் நின்றிருந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 140 மதுபாட்டில்கள் இருந்தன.
விசாரணையில், பொன்னம்மாபேட்டை, ரயில்வே வடக்கு தெருவை சேர்ந்த ராஜா, 31, என்பதும், கள்ளத்தனமாக விற்க முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 140 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சங்ககிரி போலீசார், அய்யங்காட்டூரில் உள்ள தாபாவில், மது-பாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த, தர்வேஷ் மைதீன், 32, என்பவரை கைது செய்து, 28 மதுபாட்டில்கள், 250 ரூபாயை பறி-முதல் செய்து, தப்பிய ஒருவரை தேடுகின்றனர். அதேபோல் ராயலுார் சுடுகாட்டில், அருண்குமார், 33, என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில், 250 ரூபாயை பறிமுதல் செய்து, தப்பிய ஒருவரை தேடுகின்றனர்.
