/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்
/
மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்
மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்
மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்
ADDED : மார் 11, 2025 07:12 AM
கெங்கவல்லி: மலை அடிவார பகுதியில், மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடிய நிலையில், டிப்பர் லாரி, பொக்லைன் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் சிலர், மண் கடத்துவதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, கெங்கவல்லி போலீசார், புதுப்பட்டி மாரியம்மன் கோவில், மலை அடிவார பகுதியில் ஆய்வு செய்தனர். மண் கடத்தலில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.
மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் வாகனம், டிப்பர் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள், வாகன உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.