/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை முயற்சி வழக்கில் லாரி டிரைவர் கைது
/
கொலை முயற்சி வழக்கில் லாரி டிரைவர் கைது
ADDED : ஏப் 25, 2025 02:19 AM
ஆத்துார்ஆத்துார், அம்மம்பா ளையம், நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி அனிதா, 36. அதே தெருவை சேர்ந்த ரவி மனைவி அன்பரசி, 48. இவர்கள் இடையே, கடந்த, 19ல், தெருவில் குப்பை கொட்டுவது, கார் நிறுத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
அதில் அன்பரசி மகன் பூபதிராஜாவுக்கு ஆதரவாக, அவரது நண்பர் பாலமுருகன், 54, லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதில் லாரியை தடுக்க முயன்ற பெண்கள் உள்ளிட்டோர் ஓடியதால், கார் மீது மோதியது. இதுகுறித்து அனிதா புகார்படி அன்பரசி, பூபதிராஜா, உறவினர்கள் கதிரவன், பாலமுருகன், செல்வி மீது கொலை முயற்சி, பொது சொத்து சேதம் உள்பட, 4 பிரிவுகளில், ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்தனர். அன்பரசி, செல்வியை, கடந்த, 21ல், கைது செய்தனர். டிரைவர் பாலமுருகன், நேற்று ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், தொடர்ந்து கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரை, போலீசார் தேடுகின்றனர்.

