/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி உரிமையாளர் சங்கத்தினர் மறியல்
/
லாரி உரிமையாளர் சங்கத்தினர் மறியல்
ADDED : பிப் 05, 2026 04:31 AM

மேட்டூர்:புனேவுக்கு லோடு இறக்க சென்ற லாரி ஓட்டுனர் மற்றும் உதவி-யாளர்கள் நிலை குறித்து தெரிவிக்க, லாரி உரிமையாளர்கள் சங்-கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அருகே மேச்சேரி, பொட்டனேரியில் தனியார் தேனி-ரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இரும்பு, பல்வேறு நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்-பட்டு வருகிறது. கடந்த ஜன.,26ல், 20 லாரிகள் மூலம் இரும்பு பாரம் ஏற்றி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தொழிற்சாலைக்கு சென்ற லாரிகளில் இருந்த இரும்பு பாரம் இறக்காமல், அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொட்டனேரியில் உள்ள நிறுவனத்திடம், லாரி உரிமையாளர்கள் கேட்டபோது அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் லாரியில் சென்றவர் நிலை குறித்து அறிய முடியவில்லை. இதனை கண்டித்து நேற்று காலை, 11:30 மணிக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் தலை-மையில், 100க்கும் மேற்பட்டோர் மேட்டூர்--சேலம் தேசிய நெடுஞ்சாலை பொட்டனேரியில், அரை மணி நேரம் சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.
மேச்சேரி போலீசார் மற்றும் மேட்டூர் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் தொழிற்சாலை அதி-காரிகள் உரிய விளக்கம் அளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

