sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரி 'ஸ்டிரைக்'

/

 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரி 'ஸ்டிரைக்'

 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரி 'ஸ்டிரைக்'

 டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் லாரி 'ஸ்டிரைக்'


ADDED : பிப் 15, 2026 03:07 AM

Google News

ADDED : பிப் 15, 2026 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: டெல்டா மாவட்டங்களில் நாளை முதல், லாரி டிரைவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியதாவது:

லாரிகளுக்கு தகுதி சான்றிதழ் பெறும் கட்டணத்தை உயர்த்தி, நவ., 11ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதை தமிழக அரசும் உடனே அமல்படுத்தியதால், தகுதி சான்றிதழ் கட்டணம், 850 ரூபாயில் இருந்து, 28,200 ரூபாயாக எகிறியது. இதனால், உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

இதை குறைக்க வலியுறுத்தி, மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. எட்டு ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளுக்கு, ஆண்டுதோறும் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

இதனால், டெல்டா மாவட்ட பகுதி உரிமையாளர்கள், தகுதி சான்றிதழ் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து, நாளை முதல், திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணிகள் பாதிக்கும். மாநில லாரி உரிமையாளர் சம்மேளன அவசர கூட்டம், நாளை மறுநாள் நடக்க உள்ளது.

அன்று தமிழகம் முழுதும், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us