/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீட்டு நடத்திய தொழிலாளி தற்கொலை முதியவர் கைது; உறவினர் மீது வழக்கு
/
சீட்டு நடத்திய தொழிலாளி தற்கொலை முதியவர் கைது; உறவினர் மீது வழக்கு
சீட்டு நடத்திய தொழிலாளி தற்கொலை முதியவர் கைது; உறவினர் மீது வழக்கு
சீட்டு நடத்திய தொழிலாளி தற்கொலை முதியவர் கைது; உறவினர் மீது வழக்கு
ADDED : பிப் 14, 2024 09:49 AM
இடைப்பாடி: சீட்டு நடத்திய தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் இணைந்து சீட்டு நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சங்ககிரி, தேவூர் அருகே சாமியம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால், 36. அங்குள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 50. இருவரும் அப்பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை, தனபால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி, தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் கணவர் தனபால், சீட்டு நடத்தி வசூலித்து கொடுத்த பணத்தை, பழனிசாமி உள்பட, 5 பேர் திருப்பி தராததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனிசாமியை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சீட்டு போட்டவர்களுக்கு பழனிசாமி பணத்தை தரவில்லை. அவர் வசூலித்த பணத்தை, அவரது அக்கா காந்திமதி, மாமா முனியப்பனிடம் கொடுத்து வைத்தார். இதனால் சீட்டு போட்டவர்கள் தனபாலிடம் கேட்டுள்ளனர். அவர், அவரது தந்தை பெயரில் இருந்த வீடு, நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தும், அவரது பெயரில் உள்ள இருசக்கர வாகன ஆர்.சி.,யை அடமானம் வைத்தும் சிலருக்கு பணம் கொடுத்தார். மற்றவர்களும் பணத்தை திருப்பி தர கேட்க, தனபால் மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

