ADDED : ஆக 08, 2026 05:39 AM

அ நிறம் | அளவு
சேலம்; சேலம், அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் வில்வேஸ்வரன், 24. கறி வெட்டும் தொழிலாளி. இவர் தாகூர் தெருவை சேர்ந்த, 20 வயது இளம்பெண்ணை
காதலித்தார்.
ஆனால் வில்வேஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அப்பெண் விலகியுள்ளார். நேற்று முன்தினம் அப்பெண்ணிடம், 'உன்-னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். நீ யாரிடமும் பேசக்கூடாது' என கூறி தகராறு செய்-துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் தாத்தா தட்டிக்கேட்க, அவரை வில்வேஸ்வரன் தாக்கியுள்ளார். காயம் அடைந்த தாத்தா, சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, அன்ன-தானப்பட்டி போலீசார் விசாரித்து, வில்வேஸ்வ-ரனை கைது செய்தனர்.
