/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்டுப்பன்றிகள் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதம்
/
காட்டுப்பன்றிகள் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதம்
காட்டுப்பன்றிகள் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதம்
காட்டுப்பன்றிகள் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதம்
ADDED : ஆக 21, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி வாஞ்சி நகரில், விவசாய நிலங்கள் மலை அடிவாரத்தில் உள்ளன. இதில் அப்பகுதி விவசாயி காந்தி, 54, மூன்று மாதங்களுக்கு முன், 2 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்தார்.
நேற்று அதிகாலை, மலையில் இருந்து நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம், 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்களை கடித்து சேதப்படுத்தியது. இதை கண்டு காந்தி அதிர்ச்சியடைந்தார். சேதமடைந்த சோளப்பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க, காந்தி வலியுறுத்தினார்.