/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா
/
தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு மலேரியா
ADDED : செப் 24, 2025 03:07 AM
கெங்கவல்லி:தென்னாப்ரிக்காவில் இருந்து திரும்பியவருக்கு, மலேரியா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், அவர் வசிக்கும் பகுதியில் மருத்துவ குழுவினர், நோய் தடுப்பு பணி மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்தவர் சக்திவேல், 40; கணினி இன்ஜினியரான இவர், சில மாதங்களுக்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். காய்ச்சல் ஏற்பட்டதால், செப்., 3ல் சொந்த ஊர் வந்தார்.
கடும் காய்ச்சலால், சேலத்தில் தனியார் மருத்துவமனையில், 16ல் அனுமதிக்கப்பட்டபோது, மலேரியா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார்.
இதனால் கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி தலைமையில் ஆத்துார் சுகாதார குழுவினர், நேற்று சக்திவேல் வீட்டில் கொசு மருந்து தெளித்து, புகை மருந்து அடித்தனர். அவரது வீட்டை சுற்றி, 50 மீட்டர் துாரத்தில் வசிப்போருக்கு ரத்த மாதிரி எடுத்தல், காய்ச்சல் பாதிப்பு குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.