தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மால்கோ பள்ளி முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம்

மால்கோ பள்ளி முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம்

மால்கோ பள்ளி முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம்


ADDED : ஜூன் 15, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்-நிலை பள்ளியில், 2001ல் படித்து முடித்த, மாணவ, மாணவியரின், 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. தற்போது வெளிநாடு, வெளிமாநிலங்-களில் பணிபுரியும் முன்னாள் மாணவ, மாண-வியர், குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

பாடம் கற்று தந்த முன்னாள் ஆசிரியர்களுக்கும், இன்னாள் ஆசிரியர்களுக்கும், பரிசுகள் வழங்கி ஆசி பெற்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். கலைநிகழ்ச்-சியும் நடந்தது. இறுதியில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக மாணவ, மாணவியர், 50க்கும் மேற்பட்ட கார்-களில், ஆசிரியர்களை அழைத்து கொண்டு, தங்க-மாபுரிபட்டணம் புது பாலத்தில் இருந்து ஊர்வல-மாக பள்ளிக்கு வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us