ADDED : ஜன 23, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மணியனுார் பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருபவர் பாஷா, 35. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி சந்தோஷ்-குமார், 30, டாஸ்மாக் கடைக்கு வந்தார்.
அப்போது பாஷாவிற்கும், சந்தோஷ்குமாருக்கும் தகராறு ஏற்-பட்டது. இந்நிலையில் அருகில் இருந்த ஸ்க்ரு டிரவைரை எடுத்து, பாஷாவை சந்தோஷ்குமார் குத்தினார். இதில் படுகாயம-டைந்த பாஷா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்ததில், சந்தோஷ்குமாரிடம் பாஷா கடனாக, 2,000 ரூபாய் பெற்றுள்ளார். அதை கொடுக்காததால் தகராறு ஏற்-பட்டது தெரியவந்துள்ளது.
