ADDED : ஜன 22, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
சேலம்: ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, வெள்ளைய கவுண்டர் காட்டை சேர்ந்தவர் சுரேஷ், 50. இவரது அண்ணி நிலா. செல்ல-முத்து கவுண்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 46. இவர், நிலாவிடம் கடனாக, 5,000 ரூபாய் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் சுரேஷ், நிலா ஆகியோர், செல்வகுமாரிடம் கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர், பணம் தராமல் தகாத வார்த்தைகளில் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கி, கொன்று விடுவதாக மிரட்டிச்சென்றார். அதில் காயம் அடைந்த சுரே ைஷ, மக்கள் மீட்டு, நைனாம்பட்-டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்-படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து, செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்.
