ADDED : ஏப் 11, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்; தாரமங்கலத்தை சேர்ந்த கோபால் வீடு அருகே குடிநீர் குழாய் பகுதியில், நேற்று முன்தினம் காலணி இருந்தது
. இதுகுறித்து அவரது அத்தை மகன் கணேசன், 41, கேட்டு கோபாலை தாக்க முயன்றார். கோபால் தம்பி மோகன், 38, தடுக்க முயன்றார். அவரது வலது கை ஆள்காட்டி விரலை கணேசன் கடித்ததில் துண்டானது. அவரை மீட்டு, ஓமலுார் ஜி.ஹெச்.,ல் சேர்த்தனர். தாரமங்கலம் போலீசார், கணேசனை கைது செய்-தனர்.
