ADDED : ஆக 03, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:மனநல பிரச்னைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த துாய்மை பணியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில், 22 வயது பெண் ஒருவர், மனநலம் சார்ந்த பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு, தனியார் ஒப்பந்தம் சார்பில், துாய்மை பணியாளராக பணிபுரியும், வாழப்பாடியை சேர்ந்த பழனிவேல், 45, நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் கூச்சலிட, பழனிவேல் ஓடிவிட்டார். புகாரில், பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.